சென்னை: தீபாவளிக்கு, இரண்டு லட்சம் பேர், சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.சென்னையில் இருந்து, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், இன்று, 3,575; நாளை, 3,817; நாளை மறுநாள், 3,975 என, மொத்தம், 11ஆயிரத்து, 367 பஸ்கள், மற்ற ஊர்களில் இருந்து, 9,200 பஸ்கள் என,மொத்தம், 20 ஆயிரத்து, 567 பஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னையில் இருந்து, நேற்று முதலே, அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும், நேற்று மாலை நிலவரப்படி, 23 ஆயிரத்து250 பேர், முன்பதிவு செய்து பயணித்தனர். இன்று, பயணிக்கும் வகையில், 30 ஆயிரத்து, 298 பேர், முன்பதிவு செய்துள்ளனர். நாளை, 7,402 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மூன்று நாட்களும் சேர்த்து, 77 ஆயிரத்து, 403 பேர், அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் வரும், 7, 8, 9ம் தேதிகளில், பயணிக்கும் வகையில், 51 ஆயிரத்து, 424 பேர், முன்பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை வரை, அரசு பஸ்களில் பயணிக்க,1 லட்சத்து, 28 ஆயிரத்து, 827 பேர், முன்பதிவுசெய்திருந்தனர்.

இதைத் தவிர்த்து,முன்பதிவு செய்யாமல்பயணிப்போரும், இதே எண்ணிக்கையில் இருப்பர் என, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், அரசு பஸ்களில், சொந்த ஊர்களுக்குசெல்வர் எனவும், இதனால், 10 கோடிரூபாய் வரை வசூலாகும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *