ஒருகல் ஒருகண்ணாடி, நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘கெத்து’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘மான் கராத்தே’ பட இயக்குனர் திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தின் படிப்பும் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் உதயநிதி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ‘ஜாலி எல்.எல்.பி’ என்ற படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். அவருடைய ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். இருவரும் ஏற்கனவே ”ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக் உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் தயாரித்த தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா தற்போது இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Hansika once again pair with Udhayanidhi Stalin in his next film after “Gethu”.