carfreeday1692015வெளிநாடுகளில் உள்ளது போல சென்னையில் வாகனம் இல்லா சாலை திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் அமல்படுத்த ஏற்கனவே சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்த நிலையில் நேற்று சென்னை பெசன்ட் நகரில் வாகனம் இல்லாத சாலை திட்டம் பொதுமக்களின் அமோக ஆதரவுடன் அமல்படுத்தப்பட்டது.

சாலைகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுதுபோக்கும் வகையிலும், வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும் வாகனம் இல்லாத சாலைகள் திட்டத்தை முதன்முதலில் நேற்று வெற்றிகரமாக அமல்படுத்தப்படுத்தப்பட்டது.

தனியார் தொண்டு நிறுவன பங்களிப்புடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் நேற்றி நடைபெற்ற வாகனம் இல்லாத சாலை திட்டம் காலை 6 முதல் 9 மணி சிறப்பாக நடந்தது. இந்த நேரத்தில் பெசன்ட் நகர் எலியட்ஸ் சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. மிதிவண்டிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் குடும்பத்துடன் விளையாட்டுகளையும், சந்திப்பு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டனர். இதனால் சாலையில் திருவிழாக் கூட்டம் போல மக்கள் இருந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியது: குடும்பத்துடன் வெளியில் அமர்ந்து பேசுவது சென்னைவாசிகளுக்கு கிடைக்காத வாய்ப்பாகும். கிராமங்களில் மட்டுமே வீதிகளில் மக்கள் கூடி பேசி, மகிழ்வர். சென்னையில் வாகனம் இல்லாத சாலை திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதால், அந்த அனுபவம் நகரவாசிகளுக்கும் கிடைத்துள்ளது. இதுபோல பல சாலைகளை வாகனம் இல்லாத சாலைகளாக அறிவிக்க வேண்டும். இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் முடங்கியிருந்த குழந்தைகள் சாலைகளில் வந்து விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்தத் திட்டம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். இதனால், மக்கள் அதிக அளவில் கடற்கரைக்கு வருவர். அதுமட்டுமின்றி படிப்படியாக சென்னையின் மற்ற பகுதிகளிலும் இந்த திட்டம் அமல்படுத்த மாநகராட்சி ஏற்பாடு செய்யும் என்று அவர் கூறினார்.

English Summary:Vehicle Free road Plan Implemented in Besantnagar Chennai.