நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதை அடுத்து சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங் கண்ணி திருத்தலத்திலும் 43-வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்து 12 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட புதிய வேளாங்கண்ணி கொடியை 25 அடி உயரமுள்ள வெண்கல கொடிமரத்தில் ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து நடைபெற்ற சிறப்பு கூட்டு திருப்பலி பிரார்த்தனையில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் நேற்று நடைபெறும் உழைப்பாளர் விழாவிலும் திருச்சி மறை மாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா கலந்துகொடு விழாவை சிறப்பித்தார்.

மேலும் வரும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள பக்த சபைகள் விழாவில் வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்தர ராஜூ அவர்களும், 6ஆம் தேதி நடக்கும் நற்கருணை திருவிழாவில் சென்னை முன்னாள் பேரா யர் ஏ.எம்.சின்னப்பா அவர்களும் பங்கேற்க உள்ளனர். செப்டம்பர் 7ஆம் தேதி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் ஆடம்பர தேர் பவனி, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில் நடைபெறுகிறது.

திருவிழாவின் கடைசி நாளான செப்டம்பர் 8ஆம் தேதி காலை அன்னை மரியாளின் பிறந்தநாள் விழா மற்றும் ஆரோக்கிய அன்னையின் பெருவிழா, அன்னைக்கு முடிசூட்டு விழா நடைபெறும். மாலை 5.30 மணிக்கு கொடியிறக் கத்துடன் திருவிழா முடிவடையும் என்று அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் அதிபர் மற்றும் பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர், நிர்வாக தந்தை அமல்ராஜ், உதவி பங்கு தந்தை இம்மானுவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

English Summary : Annai Velankanni church festival begins after hoisting the flag in Besant Nagar.