வோடபோன் நிறுவன பயனர்களுக்கு ரூ.169 விலையில் வரும் இந்த புதிய சலுகையை மாற்றி உள்ளது அதாவது ரூ.199 மற்றும் ரூ.399 விலையில் வழங்கி வரும் பிரீபெயிட் சலுகைகளை மாற்றுவதாக வோடபோன் அறிவித்துள்ளது. புதிய மாற்றங்களின் படி இரு சலுகைகளிலும் பயனர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். வோடபோன் ரூ.199 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி இருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 42 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

டேட்டா தவிர அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் SMS . மற்றும் வரம்பற்ற ரோமிங் வழங்கப்படுகிறது. முன்னதாக தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 100 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் STD கால்கள் , தினமும் 100 SMS ., தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் சலுகையில் பயனர்களுக்கு 84 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

முன்னதாக இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு, தினசரி டேட்டா அளவு குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு சலுகைகளிலும் தினசரி வாய்ஸ் கால் அளவு 250 நிமிடங்களுக்கும், வாரம் 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட லிமிட்டை கடந்ததும், வாய்ஸ் கால் மேற்கொள்ள பயனர்கள் நொடிக்கு 1.2 பைசா அல்லது நிமிடத்திற்கு ஒரு ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும். இதேபோன்று நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு கடந்ததும், ஒரு எம்.பி. டேட்டா பயன்படுத்த 50 பைசா கட்டணம் வசூலிக்க படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *