சென்னையில் இன்று (ஜூன் 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,551 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,532 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 36,256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 152 ரூபாய் உயர்ந்து 36,408 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.4,759லிருந்து இன்று ரூ.4,778 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 38,072 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 152 ரூபாய் உயர்ந்து 38,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *