அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘தல 56’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்து வரும் லட்சுமிமேனன் கல்லூரி மாணவியாக நடித்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவியது. ஆனால் தற்போது வந்த புதிய தகவலின்படி லட்சுமி மேனன் இந்த படத்தில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் ஊழியராக நடித்து வருவதாகவும், இவருடைய கேரக்டர் படத்தின் திருப்புமுனைக்கு உதவும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் ரஜினி நடித்த பாட்ஷாவின் ரீமெக் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் முடிவடைய உள்ளதாகவும், மிகவிரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக அஜீத் உள்பட படக்குழுவினர் அனைவரும் கொல்கத்தா செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அஜீத் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.அஜீத்தின் அறிமுகப்பாடல் உள்பட மூன்று பாடல்களை அனிருத் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

English Summary: Whether Lakshmi Menon to be college girl or not?, in Ajith’s Next Movie.