இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் வெற்றி பெற்றதை அடுத்து அவர் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான். இந்த திரைப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை அவரது நெருங்கிய நண்பரான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ஆகிய மூன்று படங்களிலும் அவருக்கு இணையான வேடத்தில் நடித்தவர் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல தரமான படங்களை வாங்கி தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது தனது நெருங்கிய நண்பர் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளார். தியேட்டர்களை அதிகளவு புக் செய்து மிகுந்த அனுபவம் உள்ள இந்த நிறுவனம் சந்தானம் படத்தை வெளியிடுவதால் ‘இனிமே இப்படித்தான்’ படம் பெருவாரியான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானத்துக்கு ஜோடியாக ஆஷ்னா ஜாவேரி, அகிலா கிஷோர் ஆகிய இரு நாயகிகள் நடித்திருக்கும் இந்த படத்தை முருகானாந்த் என்ற இரட்டையர்கள் இயக்கியுள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தை சந்தானம் முதன்முதலாக சொந்தமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summayr: Udayanidhi again joins with Santhanam by producing Santhanam’s next film “Inime Ipadithan”.