Aditya_Puri_2434244fஇந்திய வங்கிகளின் தலைவர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதன் விபரங்களை தற்போது பார்க்கலாம்.

ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் ஆதித்யா பூரி: இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளின் தலைவர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் இவர்தான். 2015-16 ஆம் நிதியாண்டில் இவரது சம்பளம் 31 சதவீதம் உயர்ந்து ரூ. 9.73 கோடியாக உள்ளது. தனியார் வங்கியின் தலைவர்களில் அதிக சம்பளம் வாங்கும் நபராக முதலிடத்தில் இவர் உள்ளார்.

ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா: அதிக சம்பளம் வாங்குபவர்களில் இரண்டாவது இடத்தில் இவர் உள்ளார். இவரது மொத்த சம்பள மதிப்பு 28 சதவீதம் உயர்ந்து ரூ.5.50 கோடியாக உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் சி.இ.ஓ சாந்தா கொச்சார்: இவருடைய ஊதிய மதிப்பு 22 சதவீதம் சரிந்து கடந்த ஆண்டு ரூ. 4.79 கோடி ஊதியம் வாங்கியுள்ளார்.

யெஸ் வங்கியின் தலைவர் ராணா கபூர்: கடந்த ஆண்டு இவரது ஊதியம் ரூ. 5.67 கோடியாகும். ஆனாலும் இவரது ஊக்கத்தொகைகள் 20.76 சதவீதம் உயர்ந்துள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக்: இவரது ஆண்டு சம்பளம் 9 சதவீதம் அதிகரித்து ரூ. 2.47 கோடியாக உள்ளது.

English Summary:Who will be the highest-pay bank CEO’s in India?