தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நினைவாக சமீபத்தில் அஞ்சல்தலை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அஞ்சல் தலைகளை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

ரூ.400 மதிப்புள்ள இந்த அஞ்சல் தலைகளை பெறவிரும்புவர்கள் அதற்குரிய கட்டணத்தை 31812185193 என்ற வங்கிக்கணக்கில் கட்டியவுடன் இதுகுறித்த விவரங்களை chennaiphil@gmail.com என்ற இமெயிலுக்கு தங்கள் முழு முகவரியுடன் செல்போன் எண்ணையும் அனுப்பி வைத்தால் அவர்களுடை அஞ்சல்தலை வீடுதேடி வரும் என்றும் மேலும் இந்த அஞ்சல் தலைகளை மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 044-28543199, 28520926 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளும்படி சென்னை மண்டல அஞ்சல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

English Summary : In honor of ongoing World Cup a stamp has been released. The stamp can be bought through E-mail in Chennai.