சென்னைவாசிகள் இனி தங்களுடைய சொத்து வரியை எவ்வித கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் சொத்து வைத்துள்ளவர்கள் இனிமேல் ஐசிஐசிஐ வங்கியின் மூலம் ஆன்லைனில் எந்த வித கட்டணமும் இன்றி தங்கள் சொத்து வரியை கட்டிக்கொள்ளலாம். இதற்கான ஒப்பந்தம் அவ்வங்கியுடன் சமீபத்தில் கையெழுத்தானதாகவும் மேலும் சில வங்கிகளும் கட்டணமின்றி சொத்து வரியை வசூல் செய்ய ஒப்புகொண்டுள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் சென்னையில் சொத்து வரியை ஆன்லைன் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் கட்டி வந்தவர்கள் வங்கிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் சென்னைவாசிகள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தின் மூலம் எந்தவித கட்டணமும் இன்றி சொத்து வரியை செலுத்தலாம். இந்த வசதி சென்னையில் சொத்து வைத்துள்ள வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு பெரும்பயன் கொடுக்கும்.

English Summary : Chennai people can now pay their property taxes through online payment in ICICI bank.