தமிழகத்திலேயே முதல்முறையாக ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்ற சிகிச்சை முறையில் இதயநோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.

சமீபத்தில் வங்கதேச நாட்டை சேர்ந்த ஷபிக்குல் இஸ்லாம் என்பவர் இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவருடைய வலது தமனியில் 100% அடைப்பு இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி மூலம் சினர்ஜி ஸ்டெண்ட் பயன்படுத்தி சிகிச்சை அளித்தனர்.

தற்போது ஷபிக்குல் குணமடைந்து வருவதாக எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் இதய அறிவியல் துறையின் இதய சிகிச்சை நிபுணர் ஜோதிர்மய டாஷ் அவர்கள் கூறியுள்ளார்.

English Summary: First in Tamilnadu Angioplasty Surgery got success. SRM Hospital makes the new record.