திருப்பூர் – ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர்-ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 7 முதல் 22ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு கோவை-சேலம், சேலம்-கோவை பயணிகள் ரயில் (வண்டி எண்: 66602, 66603) ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7இல் நின்று செல்லும் ரயில்கள்

ஆலப்புழை-டாடா தன்பாத் விரைவு ரயில் வண்டி (எண்: 13552) கோவை ரயில் நிலையத்தில் 80 நிமிடங்கள் நின்று செல்லும். எர்ணாகுளம் – பெங்களூரு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12678) கோவை, திருப்பூரில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். ஷாலிமர்-திருவனந்தபுரம் விரைவு ரயில் (வண்டி எண்: 22642), கேஎஸ்ஆர் பெங்களூரு – எர்ணாகுளம் விரைவு ரயில் (வண்டி எண்:12677), சென்னை சென்ட்ரல் – கோவை விரைவு ரயில் (வண்டி எண்: 12675) இருகூரில் 15 நிமிடங்கள் நின்று செல்லும்.

ஆகஸ்ட் 8இல் தாமதமாக நின்று செல்லும் ரயில்கள்

இதேபோல, ஆலப்புழை-டாடா தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) கோவை, திருப்பூரில் 80 நிமிடங்கள் நின்று செல்லும். எர்ணாகுளம் – பெங்களூரு அதிவிரைவு ரயில் (எண்: 12678) கோவை, திருப்பூரில் 40 நிமிடங்களும், எர்ணாகுளம் – பிலாஸ்பூர் ரயில் (எண்: 22816) கோவையில் 15 நிமிடமும் நின்று செல்லும்.

அதே போல, பாலக்காடு – ஈரோடு பயணிகள் ரயில், கோவை விரைவு ரயில், மங்களூரு – சென்னை விரைவு ரயில் உள்ளிட்ட மேலும் பல ரயில்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரையில் கோவை, திருப்பூர், ஊத்துக்குளி, இருகூர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் 15 முதல் 130 நிமிடங்கள் வரையில் நின்று தாமதமாகச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *