voters7316ஓட்டு போடுவதற்கு இதுவரை அரசியல் கட்சிகள்தான் பணம் கொடுக்கும் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதையும் இந்த தேர்தலில் முழுவதுமாக தடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக இருக்கும் நிலையில் ஓட்டு போட்டால் பரிசு வழங்கப்படும் என தேர்தல் அதிகாரி ஒருவரே பகிரங்கமாக அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை செய்தவர் வேறு யாரும் இல்லை. கேரள மாநிலத்தின் தேர்தல் அதிகாரிதான். இந்தியாவில் முதல்முறையாக ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு செய்த சாதனையின் சொந்தக்காரர் ஆகிறார் இந்த கேரள தேர்தல் அதிகாரி.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாவட்டங்களில் சட்டசபை தேர்தல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ல தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்கான பணிகளை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ஹரி கிஷோர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, “பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், ‘ஓட்டு போடு, வெற்றி பெறு’ என்ற பெயரில் ஓட்டுப் போடும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாழ்த்து அட்டை ஒன்று, தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்படும்.

அந்த அட்டையில் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்தல் முடிந்த பின்பு அந்த அட்டையின் அடிப்பகுதி அனைத்தும் சேகரிக்கப்பட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், பல்வேறு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். ஓட்டு போட்டால் பரிசு வழங்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: 1 Lakh for Vote. Election official announcement.