தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் இன்னும் மூன்று நாட்களில் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் தொடர்பான சில முக்கிய புள்ளிவிவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள், போட்டியிடும் வேட்பாளர்கள், போட்டியிடும் கட்சிகள் போன்ற முக்கிய தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அவற்றை தற்போது பார்ப்போம்.

1. தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் விவரம் பின்வருமாறு: ஆண் வாக்காளர்கள் – 2,88,63,013, பெண் வாக்காளர்கள்- 2,93,33,954
மூன்றாம் பாலினத்தவர் – 4, 720 மேலும் ராணுவம், ஆயுதப்படை மற்றும் வெளிமாநிலங்களில் அரசுப் பணியில் உள்ள வாக்காளர்கள் – 58114
என மொத்த வாக்காளர்கள் – 5,82,59,801

2. இந்த தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் 3776 பேர்

3. பெண் வேட்பாளர்கள் 320. இம்முறைதான் பெண் வேட்பாளர்கள் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

4. அதிக வேட்பாளர்களைக் கொண்ட தொகுதி (வேட்பாளர்கள் எண்ணிக்கையுடன்) டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மொத்தம் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதி முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

5. குறைவான வேட்பாளர்களைக் கொண்ட தொகுதி (வேட்பாளர்கள் எண்ணிக்கையுடன்) ஆற்காடு, கூடலூர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் தலா 8 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

6. ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்களைக் கொண்ட தொகுதி- 80 சட்டமன்ற தொகுதிகள்

7. கட்சி வாரியாக வேட்பாளர்கள் எண்ணிக்கை
பாஜக – 188
பகுஜன் சமாஜ் கட்சி – 158
இந்திய கம்யூனிஸ்ட் – 25
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 25
இந்திய தேசிய காங்கிரஸ் – 41
தேசியவாத காங்கிரஸ் கட்சி – 20
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – 234
திராவிட முன்னேற்றக் கழகம் – 180
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் – 104
பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் – 1235
சுயேட்சைகள் – 1566
மொத்தம் – 3776

8. மிகப் பெரிய சட்டமன்ற தொகுதி (வாக்காளர்கள் எண்ணிக்கை ரீதியாக) சோழிங்கநல்லூர்- 6,02,407 வாக்காளர்கள்

9. மிகப் பெரிய சட்டமன்ற தொகுதி (பரப்பளவு ரீதியாக) பவானிசாகர்- 2243.77 சதுர கி.மீ

10. மிகச் சிறிய சட்டமன்ற தொகுதி (வாக்காளர்கள் எண்ணிக்கை ரீதியாக) கீழ்வேளூர்- 1,63,370

11. வாக்குச் சாவடி எண்ணிக்கை 66,007

12. நேரடி போட்டியுள்ள சட்டமன்ற தொகுதிகள் எதுவுமில்லை

13. இத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை. வாக்குப்பதிவு இயந்திரங்கள்-107210 (மாற்று இயந்திரங்களையும் சேர்த்து), கட்டுப்பாட்டு இயந்திரங்கள்- 75908 (மாற்று இயந்திரங்களையும் சேர்த்து).

English Summary : 13 important information from Election Commission.