தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக புவனகிரி தொகுதியில் 17 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா சின்னம் உள்பட 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் புவனகிரி தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் நோட்டாவையும் சேர்த்து 18 சின்னங்கள் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புவனகிரி தொகுதியில் மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புவனகிரி தவிர மீதியுள்ள 233 தொகுதிகளில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும்.

இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் படமும் இடம் பெற உள்ளது. இதுதவிர எந்த கட்சிக்கு ஒட்டுப்போட்டோம் என்பதை வாக்காளர்கள் அறியக்கூடிய வசதி கடலூர் சட்டசபை தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

English Summary : 17 Election candidates and NOTA. 2 electronic voting machine in Bhuvanagiri.