தமிழக அரசு சார்பில் மாணவ–மாணவிகளுக்காக இந்த ஆண்டு 4.50 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.இதற்காக 96 நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதில் தனியார் பள்ளிகளுக்கு விற்பனைக்காக 135 கோடி புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. 3 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் தொடங்கும் ஜூன் மாதம் முதல் வாரம்தான் மாணவர்களுக்கு அரசு புத்தகங்கள் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்திலேயே புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. 10–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை முதல் பருவ புத்தகங்கள், பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்–2 வகுப்பு மாணவர்ளுக்கான 85 சதவீத புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இவை தற்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

English Summary : Tamil Nadu Government to print more than 4.50 crores this year for students. +2 and SSLC books printing process will finish and distributed in May.