சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரப்பேருந்துகள் செல்லாத இடங்களில் மினி பேருந்துகள் சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த மினி பேருந்துகள் தற்பொது சென்னையின் மிக முக்கியமான இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 100 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் மாபெரும் வரவேற்பை அடுத்து மேலும், 100 சிறிய பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று 65 சிறிய பேருந்துகளை தொடங்கிவைத்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்துள்ள மினி பஸ்கள் ஆலந்தூர், அசோக் நகர், சிஎம்பிடி, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் புதியதாக இயக்கப்பட்டுள்ள 30 வழித்தடங்களின் விபரங்கள் வருமாறு:

S.09 மேடவாகம் – ராதாநகர் கேட் வழி மேடவாக்கம் கூட்டு ரோடு, நெமிலிச்சேரி

S.10 குரோம்பேட்டை -ஜோதிநகர் வழி நேரு நகர், ராஜகீழ்ப்பாக்க, மாடம்பாக்கம்

S.18 வேளச்சேரி – நங்கநல்லூர் வழி வேளச்சேரி ரயில் நிலையம்

S.19 அஸ்த்ஹினாபுரம் – கீழ்கட்டளை வழி பொன்னியம்மன் கோவில் தெரு,

S.20 ராமாபுரம் – அசோக்பில்லர் வழி திருவள்ளூர் சாலை, நெசப்பாக்கம்

S.36 நுங்கம்பாக்கம் – டி.எம்.எஸ் வழி லயோலா கல்லூரி, ஹாடோஸ் ரோடு, ஜெமினி

S.46 திருமுல்லைவாயல் – அயப்பாக்கம் வழி பச்சையம்மன் கோவில்

S.48 ஆவடி பேருந்து நிலையம் – சிரஞ்சீவி நகர் வழி அண்ணா நகர், செந்தமிழ் நகர்

S.49 திருநின்றவூர் பிரகாஷ்நகர் – ஆவடி வழி பாலாஜி நகர், லஷ்மி நகர்

S.50 ஆவடி- பூந்தமல்லி வழி ராமரத்னா, அருணாச்சலம் நகர்

S.51 ஜெ.ஜெ.நகர் மேற்கு – கோயம்பேடு மார்க்கெட் வழி விஜயாவங்கி, கலெக்டர் நகர்

S.52 நடுவாங்கரை – கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி வழி மூவேந்தர் நகர், பெரிய கூடல்,

S.53 ஜெ.ஜெ.நகர் மேற்கு – மதுரவாயல் ஏரிக்கரை வழி நொளம்க்பூர், ஐஸ்வர்யா நகர், வானகரம்

S.54 அயப்பாக்கம் – ஜெ.ஜெ. நகர் வழி ஐசிஎப், அத்திப்பட்டு

S. 55 அயனாவரம் – அமைந்தகரை வழி வாட்டர் டேங்க், புது ஆவடி, சிந்தாமணி

S.56 சண்முகபுரம் – ரெட்டேரி வழி மேட்டூர், சூரப்பட்டு, செந்தில்நகர்

S.57 கொரட்டூர் – பெரம்பூர் வழி மோகன் கார்டன், டி.கே.பிரதர்ஸ்

S.58 சுங்கச்சாவடி – வள்ளலார் நகர் வழி ஜி.ஏ.ரோடு, ஸ்டான்லி சுரங்கப்பாதை

S.67 பிருந்தாவனம் நகர் – மூலக்கடை வழி சிவப்பிரகாசம் நகர், வேலம்மாள் கல்லூரி

S.68 மூலக்கடை – அகரம் வழி தணிகாசலம் நகர், குமரன் நகர்

S.80 குரோம்பேட்டை – பம்மல் காமராஜபுரம் வழி நியூகாலனி 6வது தெரு, லஷ்மிபுரம்

S.81 குரோம்பேட்டை – பொழிச்சலூர் வழி வெங்கடேஸ்வரா நகர், நேருநகர்

S.82 ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் – மடிப்பாக்கம் பேருந்து நிலையம் வழி ஆதம்பாக்கம் காவல்நிலையம்

S.83 தாம்பரம் மேற்கு – பெருங்களத்தூர் ரயிலடி வழி இரும்புலியூர், சர்ச் ரோடு

S.84 தாம்பரம் மேற்கு – திருநீர்மலை வழி முடிச்சூர் ரோடு, கன்னடபாளையம்

S.85 ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் – வேளச்சேரி வழி தில்லை கங்கா நகர்

S.86 தி.நகர் – நெசப்பாக்கம் வழி மேட்லி ரோடு, அசோக்பில்லர், கே.கே.நகர்

S.87 கே.கே.நகர் – சிஎம்பிடி மெட்ரோ ரயில் நிலையம் வழி அண்ணா மெயின் ரோடு, சத்திரம்

S.88 மேடவாக்கம் கூட்டு ரோடு – பள்ளிகரணை வழி கோவிலம்பாக்கம், விடுதலை நகர்,

S.89 பெருங்களத்தூர் – மண்ணிவாக்கம் கூட்டுரோடு வழி வண்டலூர் மேம்பாலம், ராம்பாலம்

தற்போது இயங்கும் வழித்தடத்தில் கூடுதலாக சிறிய பேருந்து வசதி:

S.26 அசோக்பில்லர் – வளசரவாக்கம் வழி ஜாபர்கான்பேட்டை, ராமாபுரம் ஆலமரம்

S.31 வடபழனி – கோயம்பேடு வழி விருகம்பாக்கம், சின்மையாநகர்

English Summary: 30 New Small bus routes in Chennai.