மத்திய அரசு தேர்வாணையம் (SSC) துணை ராணுவ படைபிரிவின் பல்வேறு துறைகளின் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 62390 காலி பணியிடங்கள் உள்ளன. அதில், எல்லை பாதுகாப்பு படை (BSF) 22517 பணியிடங்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) 5000 பணியிடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 24588 பணியிடங்களும் காலியாக உள்ளது. பெண்களுக்கு தனியே 8533 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதைத்தவிர, தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு: 1st ஆகஸ்ட், 2015 தேதிக்குள், 18 முதல் 25 வயது இருக்க வேண்டும்.

சலுகை: SC / ST மற்றும் 5 ஆண்டுகள் மற்றும் OBC 3 ஆண்டுகள்.

தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது 10 ம் வகுப்பு பாஸ்.

உடல்தகுதி: ஆண்களுக்கு உயரம் 170 செ.மீ., 5 செ.மீ., மார்பு விரிவாக்கமும், பெண்களுக்கு உயரம் 157 செமீ இருக்கவேண்டும். கண்பார்வை பரிசோதனை கண்டிப்பாக நடைபெறும்.

உடற்தகுதி தேர்வே முதலில் நடைபெரும். உடல்தகுதி தேர்வுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெறும். பின் கண்பார்வை மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும். தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கபடுவர்.

படிவங்களை இந்த இனைய முகவரி முலம் அனுபவும்: http://ssconline.nic.in

கட்டணம்: படிவத்தின் விலை ரூ.50/-. பெண்கள், முன்னாள் ராணுவவீரர்கள், SC / ST பிரிவினர்களுக்கு இந்த கட்டணம் கட்ட வேண்டியதில்லை.

விண்ணபிக்க கலைசி நாள்: 23 பிப்ரவரி 2015.

மேலும் விபரங்களுக்கு இந்த இணைய முகவரியை பார்க்கவும் – http://ssc.nic.in