உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை என்ற புகழைப் பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் குப்பைகள் அதிகம் இருப்பதாக வந்த புகார்களை அடுத்து சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அதிரடியாக ஒரே நாளில் சுமார் 7 டன் குப்பைகள் அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னை மெரீனாவில் அதிகளவு குப்பைகள் இருப்பதாக வந்த தகவல்களை அடுத்து மெரீனாவை சுத்தம் செய்ய மாநகராட்சி சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக உயரதிகாரிகளின் மேற்பார்வையில் 155 பணியாளர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் மெரீனாவில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை விற்பனை செய்வதாக வந்த புகார் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கிருந்த 863 கடைகளும், 612 உணவுப் பொருள்களும் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனையில் பல கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்வதும், தரமற்ற எண்ணெயில் உணவுப் பொருட்கள் செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டு அந்தக் கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். மேலும் காலாவதியான ஏராளமான தண்ணீர் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary : World’s 2nd longest Marina beach was cleaned by a single day by 155 members. 7 tons of garbage disposed in a single day.