chesscompetiotion23116தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், சக்தி குழுமத்தின் ஆதரவுடன் எட்டாவது சென்னை கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்த சதுரங்க போட்டிகளில் இந்தியா, உக்ரைன், ரஷ்யா, இத்தாலி, உஸ்பெகிஸ்தான், பிரான்ஸ், வியட்நாம், பங்களாதேஷ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இவர்களில், 20 கிராண்ட் மாஸ்டர்கள், 22 சர்வதேச மாஸ்டர்கள் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் குமார் கவுரவ் உட்பட 5 பேர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை ஏழாவது சுற்று போட்டி தொடங்கியது.

இந்த சுற்றில் உக்ரைன் வீரர் சொலோடோ செங்கோ யூரி, ரஷிய வீரர்கள் விளாதிமிர், மைக்கேல், உஸ்பெகிஸ்தான் வீரர் துமேவ் மராப் என, நான்கு வீரர்கள் முன்னிலை பெற்றனர்.

கடந்த 18ஆம் தேதி ஆரம்பமான இந்த சதுரங்க போட்டிகள் வரும் 25ஆம் தேதி முடிவடைகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சத்து ஐம்பதாயிரம் வரை பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டி குறித்தும் விளையாடும் வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற வீரர்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள http://www.tamilchess.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

English Summary: 8th Grand Master Chess Tournament in Chennai.