ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்த அடுத்த நாளே சென்னையில் பயணிகள் குறை தெரிவிக்கும் ‘ஹெல்ப்லைன்’ தொடங்கிய 1 மணி நேரத்தில் 15 புகார்கள் வந்துள்ளது.
மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார். பயணிகளின் குறைகளையும், பிரச்சினைகளையும் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘138’ என்ற அகில இந்திய அளவிலான ‘ஹெல்ப்லைன்’ வசதியை அவர் அறிவித்தார்.
பட்ஜெட் அறிவிப்பு வெளியாகிய அடுத்த நாளே நேற்று பகல் 2 மணிக்கு இந்த ‘ஹெல்ப்லைன்’ வசதி தொடங்கப்பட்டுவிட்டது. தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் அலுவலகம் அறையின் முதல் மாடியில் இதற்கென தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என 3 ஷிப்டு முறைகளில் பயணிகளின் குறைகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்கலாம்.
இச்சேவை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் மட்டும் 15 புகார்களை பயணிகள் தெரிவித்தனர்.குறிப்பிட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
English Suammary : After submitting the railway budget, Railway minister Suresh Babu introduced helpline service number 138. After starting this service 15 complaints are registered within 1 hour.