தமிழகத்திற்கு வரும் 7-ஆம் தேதி ரெட் அலர்ட் அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7-ஆம் தேதி முதல் அதிகனமழை முதல் மிக அதிகனமழை இருக்கும் என இந்தய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 25 செமி மேல் மழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாய் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தி சென்னை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நாகை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7-ஆம் தேதி முதல் அதிகனமழை முதல் மிக அதிகனமழை இருக்கும்.

தென்கிழக்கு அரபிக்கடலில் வரும் 5-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், பின்னர் அது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும்.

தென் மேற்கு வங்க கடலில் வரும் 8-ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். எனவும் அறிவித்துள்ளது.

மழை அளவு:

நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம்- 87. 40 மி.மீ.,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி- 32 மி.மீ.,
சேலம் மாவட்டம் ஏற்காடு – 23 மி.மீ.,
வேலூர் மாவட்டம் ஆம்பூர் – 22 மி.மீ., திருப்பத்தூர்- 18 மி.மீ.,
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் 35 மிமீ.
திருவாரூர் மாவட்டம் நன்னலம் – 58 மி.மீ.,, பாண்டவையாறு – 50 மி.மீ.,
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் – 31மி.மீ., தழுதாளை – 29மி.மீ.,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – 71மி.மீ.,, திரமானூர் 67மி.மீ.,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு – 60மி.மீ.,,கலசபாக்கம் – 31 மி.மீ.,
சேலம் மாவட்டம் வீரகனூர் – 30 மி.மீ., ஆத்தூர், ஏற்காட்டில் தலா 20 மி.மீ.,
கோவை மாவட்டம் வால்பாறை – 28 ,பொள்ளாச்சி – 27 மி.மீ.,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் – 32 மி.மீ.,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு – 50மி.மீ.,, புதுசத்திரம் – 40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *