கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவில் தனது பணியை ஆரம்பித்த ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 2001ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரூ.100 கோடி சொத்து மதிப்பை பெற்றது. அதன்பின்னர் கடந்த 14 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பலமடங்கு உயர்ந்து தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள தனியார் ஆயுள் காப்பீட்டு துறையில் ஐசிஐசிஐ நிறுவனம்தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த ஐசிஐசிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்தீப் பாக்ஷி அவர்கள் கூறும்போது, “இந்த மாபெரும் சாதனை எங்கள் மீது நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்களாலும், எங்கள் நிறுவன ஊழியர்களின் அயராத உழைப்பினாலும்தான் சாத்தியமானது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக எளிய முறையில் நம்பிக்கையுடன் ஆயுள் காப்பீடு வழங்குவதே எங்களின் அடுத்தடுத்த தொடர் முயற்சியாக இருக்கும்’ என்று கூறினார்.
English Summary: ICICI Prudential Life Insurance makes a record of Rs.1 Lakh Crores.