பிரபல வார இதழான குமுதம் பத்திரிகையில் தேமுதிக கட்சி குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டிருந்ததாக குற்றம் சாட்டிய அக்கட்சியினர் நேற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள குமுதம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேமுதிக கட்சி கொடியுடன் அங்கு கூடிய சுமார் 50 பேர் குமுதம் பத்திரிகைக்கு எதிராக கோஷமிட்டு அப்பத்திரிகையின் பிரதிகளை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள்தடைபட்டது. ஒருசிலர் குமுதம் அலுவலகத்தின் கேட் கதவில் கல்லெறிந்ததால் அலுவலக காவலர்கள் கேட் கதவை மூடிவிட்டனர்.
தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்த பின்னர் தேமுதிகவினர் கலைந்து சென்றனர். தேமுக கட்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், விரைவில் அந்த கட்சி கலைக்கப்பட்டு பாஜகவுடன் இணைத்து கொள்ளப்படும் என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகையில் சமீபத்தில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: DMDK protest before the Kumutham office for writing Libelous news against them.