இந்தியாவில் உள்ள தரம் வாய்ந்த பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி, ஐஐடி போன்றவைகளில் இளநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஜெஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு -ஏப்ரல் 2019க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வின் மூலம் பி.இ, பி.டெக், பி.ஆர்க், பி.டிசைன் போன்ற படிப்புகளில் சேர முடியும். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.03.2019, இரவு 11.50 மணி
தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.03.2019
தேர்வு நடைபெறும் நாள்: 07.04.2019 முதல் 20.04.2019 வரை
முதல் தாள் தேர்வு முடிவு NTA-யின் இணையத்தில் வெளியாகும் தேதி: 30.04.2019
இரண்டாம் தாள் தேர்வு முடிவு NTA-யின் இணையத்தில் வெளியாகும் தேதி: 15.05.2019

தேர்வுக்கட்டணம்:

ஜெஇஇ (முதன்மை) தாள்-1 (பி.இ / பி.டெக்) தேர்வு மட்டும்:
பொது / ஓபிசி பிரிவினர் – ரூ.500
எஸ்.சி / எஸ்.டி / பெண்கள் / திருநங்கை / PWD – ரூ.250

ஜெஇஇ (முதன்மை) தாள்-2 (பி.ஆர்க் / பி.பிளானிங்) தேர்வு மட்டும்:
பொது / ஓபிசி பிரிவினர் – ரூ.500
எஸ்.சி / எஸ்.டி / பெண்கள் / திருநங்கை / PWD – ரூ.250

ஜெஇஇ (முதன்மை) தாள்-1 (பி.இ / பி.டெக்) & ஜெஇஇ (மெயின்) தாள்-2 (பி.ஆர்க் / பி.பிளானிங்) :பி.ஆர்க் / பி.பிளானிங்):
பொது / ஓபிசி பிரிவினர் – ரூ.900
எஸ்.சி / எஸ்.டி / பெண்கள் / திருநங்கை / PWD – ரூ.450

வயது வரம்பு: ஜெஇஇ முதன்மைத் தேர்வுக்கு வயது வரம்பு என்று எதுவுமில்லை. யாரெல்லாம் 2017, 2018 இல் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களோ அவர்களும், 2019 இல் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்களோ அவர்களுமே இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள்.

கல்வித்தகுதி:

பி.இ / பி.டெக் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு, 10+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், +2வில் இயற்பியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களோடு, வேதியியல் / உயிரியல் / டெக்னிக்கல் வெகேஷனல் என்ற பாடத்தை பயின்றவராக இருத்தல் வேண்டும்.

பி.ஆர்க் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு, 10+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், +2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை பயின்றவராக இருத்தல் வேண்டும்.

பி.பிளானிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு, 10+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், +2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை பயின்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இத்தேர்வுக்கு www.jeemain.nic.in – என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://jeemain.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx?i=File&ii=32&iii=Y – என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *