கோடை காலம் நெருங்கி வருவதால் தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. ஏப்ரல் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடியும் வரை இன்னும் அதிகளவு வெயிலின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு சென்னை போக்குவரத்து போலீஸார்களுக்கு தினமும் குளிர்ந்த மோர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் போக்குவரத்து ஊழியர்களின் உடல்நலம் கருதி சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குளிர் மோர், எலுமிச்சம் பழச்சாறு வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியது. இந்த திட்டத்தின்படி போக்குவரத்து போலீஸார் பணி புரியும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு நேற்று வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்த திட்டத்தின் படி, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வரும் ஜூன் மாதம் வரை தினமும் 2.500 போக்குவரத்து போலீஸார்களுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary : Chennai traffic police buttermilk , fruit juice