தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்து 3 நாட்களில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு தெற்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது. தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டுகளை விட இந்த வடகிழக்கு பருவமழை 16 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக். 1 ஆம் தேதி தொடங்கிய மழை தற்போது வரை 856 மி.மீ பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 736 மி.மீ அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.