சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு-விழுப்புரம் வழித்தடத்தில் தற்போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தபாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, பயண நேரம் 45 நிமிடம் வரை குறையும்.
இதே போல, ஜோலார்பேட்டை -கோயம்புத்தூர் வழித்தடத்தில் விரைவு ரயில்களை 110 முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.