தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சென்னையில் ஒன்பது இடங்களில் அம்மா சிமெண்ட் கிடைக்குமென்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிமெண்ட் மூட்டையை விண்ணபித்து பெற்றுகொள்ளவும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார்.

சென்னையில் அம்மா சிமெண்ட் திட்டம் செயல்பட்டுவருகிறது. இந்த திட்டதின் மூலம் மக்கள் 10 முதல் 750 சிமெண்ட் மூட்டைகள் வாங்க முடியும். ஒரு மூட்டையின் விலை ரூ.190 ஆகும். அம்மா சிமெண்ட்டை வாங்க விரும்பும் மக்கள் தங்கள் விண்ணபத்துடன், அங்கீகரிக்கப்பட்ட வீட்டு வரைபடம், பகுதி வருவாய் ஆய்வாளரிடம் சான்றிதழ், சிமெண்ட் மூட்டையின் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு தமிழ்நாடு சிமெண்ட் கார்போரேஷன் லிமிடெட் (Tamilnadu Cement Corporation Limited) என்ற பெயரில் வரையோலை (DD) எடுத்து கிடங்கு பொறுப்பாளரிடம் கொடுக்க வேண்டும். பதிவு செய்த தேதியின் அடிப்படையில் முன்னிரிமை அளிக்கப்படும்.

சென்னையில் அம்மா சிமெண்ட் கிடைக்கும் இடங்கள்:

  • அண்ணாநகரில் 2 கிடங்குகள் – எண் 40, 6-வது தெரு (ரவுண்டானா அருகில்).
  • தங்கசாலை – எண் 88 பேசின் பிரிட்ஜ் சாலை.
  • தண்டையார் பேட்டையில் 2 கிடங்குகள் – எண் 1/1,சேஷாசல கிருமாணி தெரு.
  • நந்தனம் – எண் 2, சேமியர்ஸ் ரோடு.
  • கோபாலபுரத்தில் உள்ள கண்ரோன் சுமித் சாலை.
  • விருகம்பாக்கம் – எண் 29/2, ஆற்காடு சாலை.
  • திருவான்மியூரில் உள்ள ராஜீவ் காந்தி சாலை (ஒ.எம்.ஆர்.)

மேலும் விவரங்களுக்கு 1800 42522000 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என்று குறிபிடப்பட்டுள்ளது.