ammaunavagam4316சென்னையில் வாழும் ஏழை மக்களுக்கும், வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கும் குறைந்த விலையில் வயிறார உணவு கிடைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த அம்மா உணவகம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மலிவு விலையில் இட்லி, பொங்கல், சப்பாத்தி, சாம்பார் சாதம், கறிவேப்பிலை சாதம் ஆகிய சுவையான, சத்தான உணவு வகைகள் கிடைப்பதால் இதற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சென்னை நகரில் ஏற்கனவே 281 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 19 இடங்களில் அம்மா உணவகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார்.

புதியதாக அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இடங்களின் விபரங்கள் வருமாறு:

1. மண்ணடி பி.ஆர்.என்.கார் டன்,
2. வில்லிவாக்கம், ராஜமங்கலம மெயின் ரோடு,
3. வில்லிவாக்கம், வேணுகோபால் தெரு,
4. அயனாவரம், கே.கே.நகர் 5–வது தெரு,
5. கீழ்ப்பாக்கம், மனநல ஆஸ்பத்திரி மேடவாக்கம் டேங்க் ரோடு.
6. அண்ணாநகர், ஆர்ச் சித்த மருத்துவமனை அருகில்
7. ஷெனாய் நகர், காமராஜர் தெரு,
8. டி.பி.சத்திரம், வி.எஸ்.பி.புரம்,
9. அரும்பாக்கம், எஸ்.பி.ஐ. பணியாளர் காலனி 6–வது தெரு,
10. சூளைமேடு மேற்கு நமச்சிவாய புரம் பூங்கா பின்புறம்.
11. நுங்கம் பாக்கம் குட்டி தெரு,
12. தி.நகர் அபிபுல்லா சாலை, தர்மா பூங்கா அருகில்
13. விருகம்பாக்கம் இளங்கோ நகர், 1–வது பிரதான சாலை,
14. வட பழனி, நெற்குன்றம் பாதை,
15. தி.நகர். பிரகாசம் ரோடு.
16. போரூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட வளாகம்,
17. திருவான்மியூர் வால்மீகி தெரு,
18. பெருங்குடி பஞ்சாயத்து, ஆபீஸ்ரோடு,
19. செம்மஞ்சேரி சுனாமி நகர், 66–வது குறுக்கு தெரு.

புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த 18 அம்மா உணவகங்களையும் சேர்த்தால் சென்னையில் மொத்தம் 300 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Amma Restuarent opening in 19places at Chennai.