பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து எந்த வகையான படிப்புகளை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையில் இருக்கும் நிலையில் பல்வேறு வகையான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை அருகேயுள்ள பொன்னேரி பகுதியில் இயங்கி வரும் மீன்வளக் கல்லூரியும் மீன்வளப் பட்டதாரி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கல்லூரியின் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ” பொன்னேரியில் செயல்பட்டு வந்த மீன்வளத் தொழில்நுட்ப நிலையம், மீன்வளக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இதில் மீன்வளப் பட்டதாரி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பை முடித்தோர் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை ஆய்வாளர், மீன் மற்றும் இறால் பண்ணைகளை நிர்வகித்தல் ஆகியவற்றில் ஈடுபடலாம்.

மேலும் மீன்வளத்துறையில் உதவி இயக்குநர், மீன்வள ஆராய்ச்சியாளர், மீன்வளக் கல்லூரி உதவி பேராசிரியர் போன்ற பதவிகளையும் பெறலாம். இந்த கல்லூரியின் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை 20 ஆக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு www.tnfu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு 9003782832, 044- 27971557 ஆகிய எண்களை தொடர்புகொள்ளவும் என அந்த செய்திக்குறிப்பு கூறியுள்ளது.

English Summary: Bachelor Degree Applications were given to students for Tamilnadu Fisheries University.