swayam_online_mooc_platform_indian_educationசென்னைக்கு அருகில் உள்ள காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 12-ஆவது பட்டமளிப்பு விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பல்கலைக்கழக மானியக்குழுத் துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் பேசியதாவது:

பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும், 1 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன என்பதும் நல்ல செய்தி அல்ல. பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் வேலைவாய்ப்பு பெறும் தகுதியுடையவர்களாக உருவாக்கப்படுவதில்லை. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

மாணவர்களின் தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

“ஸ்வயம்’ இணையதள இலவச படிப்பு சேவை மூலம் 10 பிராந்திய மொழிகளில் வழங்கப்படவிருக்கும் 500 பாடத்திட்டங்களை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய பண்பாடு, கலாசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில், 6 பல்கலைக்கழகங்களில் யோகா படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்வியுடன் தங்கள் கலாசாரத்தைப் பற்றியும் அறிந்து இருப்பது அவசியமாகும். கலாசாரம் குறித்து அறியாத கல்வியால் சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை. மாணவர்கள் படிப்புடன் தங்களது திறமைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். இந்த விழாவில் 813 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டன.
English Summary: August 15 ‘Swayam’ free web course. Modi inaugurates.