police24314சென்னையில் கடந்த வாரம் ஐ.டி.பெண் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க கடந்த சனிக்கிழமை இரவு அதிரடி ரோந்து நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர்.

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போலீஸ் கமி‌ஷனர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் விடிய விடிய சென்னை நகர் முழுவதும் நடைபெற்ற இந்த ரோந்து பணியின் காரணமாக 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸார் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

கோயம்பேடு, அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பெரம்பூர், அம்பத்தூர் உள்பட மொத்தம் 73 இடங்களில் ரோந்து மேற்கொள்ளப்பட்டது.. அப்போது சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

போலீசாருக்கு திருட்டு சம்பவங்கள் தடுப்பது, அவசர அழைப்புகள் வந்தால் எப்படி செயல்படுவது, பஸ் நிலையங்களில் சந்தேக நபர்களை பிடித்து விசாரித்தல், விபத்தில் யாராவது சிக்கினால் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பது போன்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

ஒரே நாள் இரவில் மேற்கொண்ட ரோந்து பணியில் சந்தேகத்தின் பேரில் 468 பேரும், ரவுடிகள் 23 பேரும், தலைமறைவாக இருந்த பழைய குற்றவாளிகள் 3 பேரும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 77 பேரும் பிடிபட்டனர்.

English Summary:Chennai police patrol at Dead of night.