மன வளர்ச்சி குறைந்தவர்கள் என்று கூறப்படும் ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் ஒன்று சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நாளை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலக ஆட்டிஸம் தினம் ஏப்ரல் 2ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆட்டிஸம் குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம் ஒன்றை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் பேச்சு மொழி, கேட்பியல் துறையின் சார்பில் நாளை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மன வளர்ச்சி குறைபாடு குறித்த தகவல்கள், குறும்படங்கள், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறும். காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

English Summary: Awareness Program for Autism Children going to be held in Porur Ramachandra Hospital.