தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் நேற்று மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘தமிழக அரசு நடப்பு ஆண்டில் 7,461 நர்ஸ்களை நியமிக்க அரசு முடிவு எடுத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 5,422 டாக்டர்கள் மற்றும் கிராம செவிலியர்கள், லேப் டெக்னீஷியன், இசிஜி டெக்னீஷியன் என மொத்தம் 6,918 பணியாளர்கள், மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தனது பேச்சில் தெரிவித்தார்.

மேலும் எம்டி, எம்எஸ் ஆகிய மேற்படிப்புகளுக்கு தேர்வு நடத்தாமல் வாக்-இன் செலெக்ஷன் என்ற முறையில் விரும்புகிற இடத்தை பெற்றுக் கொள்ளும் கலந்தாய்வு திட்டம் அமலில் உள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் 32 சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

English Summary : 7461 Appointment of new nurses in the state soon