வெங்காயத்தாள் அதிகமானோருக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. கிராம புறங்களில் உள்ளவர்கள் வெங்காயத்தாளினை நன்கு அருந்திருப்பார். வெங்காயத்தாள் என்பது வெங்காய செடியில் உள்ள இலையை தான் வெங்காய தாள் என்று அழைப்பர்.

மருத்துவப்பயன்கள்:

புற்றுநோய்: வெங்காயத்தாளில் உள்ள பெக்ஷன் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

கண் பிரச்சனை: வெங்காயத்தாளினை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து, தீர்வையும் அளிக்கிறது.

இதயம்: வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் தடுக்கிறது.

கொழுப்பு: வெங்காயத்தாளை நாம் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.

ஆஸ்துமா: வெங்காயத்தாள் நாம் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும் போது, கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *