“முந்தி முந்தி விளையாடு”

புதுயுகம் தொலைக்காட்சியில் திரையுலக இளம் கதாநாயக, கதாநாயகர்கள் பங்கு பெரும் “முந்தி முந்தி விளையாடு” – கேம் ஷோ பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி புதுமுக இளஞ்சோடிகள் பங்கேற்கும் கலகலப்பான கேள்வி பதில்கள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைத்தும் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உள்ளது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் காலை 9:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ மற்றும் கிருத்திகா தொகுத்து வழங்குகின்றனர் .

“கொஞ்சம் டாக்,கொஞ்சம் ஜோக்”

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா நட்சத்திரங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் கலகலப்பான நிகழ்ச்சி ‘கொஞ்சம் டாக், கொஞ்சம் ஜோக்’.

திரையுலகில் இன்றும் கல்லூரி மாணவராக கலக்கும் நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் கொஞ்சம் டாக்,கொஞ்சம் ஜோக் நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் இருதினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும். தனது மிமிக்ரியில் எம்ஜியார்,சிவாஜி, ரஜினி என்று கலக்கியிருக்கிறார். குறிப்பாக மறைந்த முதலமைச்சர் கலைஞரின் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சனை மிமிக்ரியால் அசத்திய நிகழ்ச்சி பார்ப்பவர்களை பரவசப்படும் வகையில் எடுத்து சொல்லியிருக்கிறார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கிருத்திகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *