BGR-34-1000x1000இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆயுர்வேத மருந்துகளின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த புதுப்புது மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டைப்-2 சர்க்கரை நோயை பக்க விளைவுகள் இல்லாம்கட்டுப்படுத்தும் BGR-34 என்ற புதிய ஆயுர்வேத மருந்தை இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை லக்னோவில் உள்ள தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் (என்.பி.ஆர்.ஐ) மற்றும் மத்திய மூலிகை தாவர ஆராய்ச்சி மையம் (சி.ஐ.எம்.ஏ.பி) இணைந்து உருவாக்கியுள்ளது.

இந்த மருந்தை உருவாக்குவதற்காக 500-க்கும் மேற்பட்ட பழங்கால ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளை இந்த இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களும் அலசி ஆராய்ந்துள்ளது. குறிப்பாக, தருகரித்ரா, கிலோய், விஜய்ஸார், குத்மார், மாஜீத், மெதிகா உள்ளிட்ட மூலிகைகளை கொண்டு இந்த ஆன்டி-டயாபடிக் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக உள்ள நவீன மருந்துகள் பக்கவிளைவுகளை கொண்டதாக உள்ளன. ஆனால், பி.ஜி.ஆர்-34 ஆயுர்வேத மருந்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வருகிறது. மற்ற மருந்துகளை போல பக்கவிளைவுகள் ஏதும் இதில் இருக்காது என தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அறிவியலாளர் ஏ.கே.எஸ்.ராவத் தெரிவித்துள்ளார்.

English Summary: Ayurvedic medicine for diabetes without side effects, the introduction of new