anna-universityபொறியியல் கல்லூரி படிப்பிற்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் தற்போது பொதுப்பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலந்தாய்வில் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்யும்போது ஒருசில கல்லூரிகளின் பெயர்கள் ஒரே மாதிரி இருப்பதால் மாணவர்களில் ஒருசிலர் குழப்பம் அடைகின்றனர். அவர்களின் வசதிக்காக ஒரே மாதிரியான கல்லூரிகளின் விவரத்தை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

2016-17ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 525 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டிலான பி.இ. இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்லூரியின் தரம் குறித்து ஓரளவுக்கு எடைபோடுகின்ற வகையில், அனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரத்தையும், ஓரே மாதிரி பெயர் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும் ஆண்டுதோறும் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிலும் இந்தப் பட்டியல் அண்ணா பல்கலையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், ஓரே மாதிரி பெயர் கொண்ட 200-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி கூறுகையில், “மாணவர்கள் நலன் கருதியே விவரங்கள் வெளியிடப்படுகின்றன. கல்லூரியின் பெயரை வைத்து அல்லாமல், குறியீட்டு எண் அடிப்படையில் மாணவர்கள் இடத்தைத் தேர்வு செய்தால் எந்தவித குழப்பமும் வராது’ என்றார்.

English Summary:To alleviate the confusion of students with the same name on the details of engineering colleges of Anna University