மும்பையில் இன்று புதிய ரக ‘ஐ8’ ஸ்போர்ட்ஸ் காரை ஜெர்மனியின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான BMW அறிமுகப்படுத்தியுள்ளது. இது மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய அதிவேக ஸ்போர்ட்ஸ் கார். 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அடிப்படையில் 131 எச்.பி., உச்சபட்ச வேகத்தில் பாயும்போது 266 எச்.பி., ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 47 கிலோமீட்டர் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் கார் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 2 கோடி 30 லட்சம் என தெரிவித்துள்ளனர்.

இந்த கார் முழுக்க முழுக்க ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக பி.எம்.டபிள்யூ நிறுவன அதிகாரிகள்தெரிவித்துள்ளனர் .

English Summary : BMW launches I8 sports car in India which has a top speed of 231 kmp/hr with the price 2.30 crores in Indian money.