தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் : 250 gram
முருங்கைக்காய் : 1
வங்காயம் : 2
தக்காளி : 2
பூண்டு : 5 விதைகள்
மஞ்சள் தூல் : 1/4 டி ஸ்பூன்
சாம்பார் தூல் : 1 டி ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
புளி : சிறிய துண்டு
கடுகு : 1/4 டி ஸ்பூன்
சமையல் எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை :
உங்களுக்கு பிடித்த வடிவத்தில் கத்திரிக்காய் வெட்டி அதை உப்பு தண்ணிரில் ஊர வைக்கவும்.
முருங்கைக்காய் தேவையான அளவில் வெட்டி கொள்ளவும்.
வங்காயம் மற்றும் தக்காளியை அரிந்து வைத்து கொல்லவும்.
கடாயில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி கடுகு சேர்க்கவும், பின் கருவேப்பிலை, பூண்டு மற்றும் வங்காயத்தை சேர்த்து வதக்கி தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின், கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூல் மற்றும் சாம்பார் தூலை சேர்க்கவும்.
சிறிது அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
இறுதியாக கொஞ்சம் தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறிவிட்டு இறக்கவும்.

குறிப்புக்கள்:
எலுமிச்சை சாதம், பிரிஞ்சி சாதம், வெள்ளை சாதம், தயிர் சாதம், போன்ற உணவுக்கு இந்த கத்தரி முருங்கைக்காய் தொக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
புளிப்பு சுவை குறைக்க புளியை தவிர்த்து தக்காளியை சிறிது அளவு அதிகமாக சேர்த்து கொள்ளவும்.