கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை நிர்ணய ஒப்பந்தத்தை புதுப்பிக்க கோரி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 30–ந்தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.  இதைத்தொடர்ந்து, பாட்லிங் ஆலைகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றிலுமாக தடைப்பட்டு, கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

சென்னையில் இன்று ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சு வார்த்தையில் முடிவில் இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய வாடகை நிர்ணயம் செய்யப்படும் சூழல் உருவாகி இருப்பதால் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும் என்று தெரிகிறது.

English Summary: Tanker Lorry strike going to be finished.