இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் மத்திய கல்வி வாரியம் சுற்றறிக்கை ஒன்றை நேற்று அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய புகையிலை தடுப்பு சட்டத்தின்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சுற்றி 300 அடிதூரத்திற்கு புகையிலை பொருட்களை விற்கக்கூடாது.

அது குறித்து போர்டு ஒன்றை பள்ளிக்கூட நிறுவனம் வைக்கவேண்டும். புகையிலை பொருட்களை சாப்பிட்டால் அது உயிரைக்குடிக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு கட்டுரைப்போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தவேண்டும்.

மேலும், இதுகுறித்து பேனர் வைக்கவேண்டும். மாணவர்களும் புகையிலை உடல் நலத்துக்கு கேடு என்றும் அது உயிரைக்குடிக்க கூடியது, அது ஒரு தொற்றுநோய் அல்லாதது என்றும் விளக்கம் அளிக்கும் வகையில் பவர் பாயிண்ட் மூலம் விளக்கவேண்டும். புகையிலை உயிரைக்குடிக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்களுக்கு தரச்சான்று வழங்கப்படும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : Central board sends important circular to CBSE schools reestricting tobacco sales restriction 300 feet from schools.