251-18216தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் தற்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட்போன்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. சந்தையில் ரூ.1500 முதல் ஸ்மார்ட்போன்கள் கிடைத்தாலும் ரூ.5000க்கு மேல் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பல சிறப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா ‘திட்டத்தின் கீழ் மிகவும் விலை குறைந்த அதாவது ரூ.251 மதிப்பில் ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இவை முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் இதனைத் தயாரித்துள்ள ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தயாரிப்பு மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பதை பார்ப்போம்.

* இந்த போன் சமீபத்திய நவீன லாலிபாப் ஆன்ட்ராய்டில் இயங்கவுள்ளது. அடுத்ததாக 3 ஜியிலும் மிக வேகமான இயங்க கூடியது.

* 5 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள போன்களுக்கு இணையானதாக உள்ளது போல 4 இன்ச் ஸ்கிரீன் உள்ளது.

* 1 ஜிபி ரேம் வசதி கொண்டது. ஃபேஸ்புக், வாட்சஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை மிக வேகமாக இயக்க முடியும்

* இந்த போனில் 8 ஜிபி இன்டர்னல் கார்டு உள்ளது. அதுபோல் மைக்ரோ எஸ்.டி. கார்டும் உள்ளது. இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு இந்த போனின் விலையை காட்டிலும் அதிகம்.

* 3.2 மெகாபிக்சல் கேமரா இந்த செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி 0.3 மொகாபிக்சல் ஆகும்.

* இவ்வளவு குறைந்த விலையில் இந்த போன் கொடுக்கப்பட்டாலும் பேட்டரி ஒரு நாள் முழுமைக்கும் தாங்கும். 1450 எத்.ஏ. ஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

* ஃப்ரீடம் 251 செல் போன் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் முரளி மனோகர் ஜோசி எம்.பி. முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

* நாடு முழுவதும் 650 சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. அத்துடன் ஒரு வருட வாரண்டியும் உள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்கள், ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் இன்று முதல் சந்தைக்கு வர உள்ளன. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் இன்று காலை 6 மணி முதல் 21ஆம் தேதி இரவு 8 மணி வரை இந்த 251 ரூபாய் ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கவுள்ளது.
English summary-Cheapest Smartphone The Freedom 251 costs Rs 251 only