தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இவ்வருடம் அதிக வெயில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் முக்கிய அலுவல் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. அடுத்த மாதம் அக்னி நட்சத்திர வெப்பம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் அக்னி வெயிலுக்கும் மேலாக வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெப்பநிலை என்ன என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை தற்போது பார்ப்போம்.

இன்று பகல் 1 மணி நிலவரப்படி வெப்ப நிலை சென்னை – 93 மதுரை – 99 கோவை – 91 திருச்சி – 99 சேலம் – 97 நெல்லை – 97 தூத்துக்குடி – 95 வேலூர் – 96 ஈரோடு – 97 திருப்பூர் – 99 தஞ்சாவூர் – 97 திண்டுக்கல் – 97 ஊட்டி – 73 கொடைக்கானல் -74 பாரன்ஹீட் ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் அளவு 100 டிகிரிக்குள்ளாக இருந்தாலும் வெப்பம் 105 முதல் 113 டிகிரிக்கு சமமானதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், பழங்கள் போன்றவற்றை நாடி செல்கின்றனர்.

English Summary: Chennai and Other Parts of Tamilnadu Weather Report