கியூப் எனப்படும் விளையாட்டு மூளையின் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும் என்பதால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த விளையாட்டில் பெரும் ஆர்வம் காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கியூப் விளையாட்டில் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சென்னை பள்ளி ஒன்றில் பயிலும் 15 வயது கேசவ கிருபா என்ற மாணவர், 44 நிமிடங்களில் 293 கியூப் புதிர்களை விடுவித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளான்.

இந்த சாதனையை நிகழ்த்திய பின்னர் கேசவ கிருபா செய்தியாளர்களிடம் கூறியபோது, “தாய்நாட்டுக்கு பெருமை சேர்ப்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டேன். இதற்கு முன்னர் பயிற்சியின்போது முதலில் 289 புள்ளிகளையும், இரண்டாவதாக 270 புள்ளிகளையும் பெற்றேன். பின்னர், 281 புள்ளிகளையும், அடுத்து 284 புள்ளிகளையும் பெற்றேன். தற்போது, 44 நிமிடங்களில் 293 புள்ளிகளை பெற்றுள்ளேன். இது, கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்’ என்று கூறினார்

இதற்கு முந்தைய கின்னஸ் சாதனையாக 210 புதிர்களை விடுவித்ததுதான் இடம்பெற்றிருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Kesava Kirupa, 15-year-old Chennai boy sets new Guinness record bysolving 293 puzzle cubes in 1 hour.