ஜோலாா்பேட்டை – சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு ரயில் நாளை (12.09.2023) முதல் பல்வேறு தேதிகளில் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலிலிருந்து செப்.12,13,14,15,21,22,24,25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில், (எண்:16203) மறுமாா்க்கமாக திருப்பதி – சென்னை சென்ட்ரலுக்கு செப்.12,13,14,15,20,21,23,25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (எண்: 16204) ரத்து செய்யப்படவுள்ளன.

அதே போல, சென்ட்ரலிலிருந்து செப்.12,13,14,20,21,23,24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு மைசூருக்கு இயக்கப்படும் காவேரி விரைவு ரயில் (எண்: 16021), மறுமாா்க்கமாக மைசூரூ – சென்னை சென்ட்ரலுக்கு செப்.13,14,15,21,22,24,25 ஆகிய இயக்கப்படும் விரைவு ரயில் (எண்: 16022), கேரளத்தில் இருந்து வரும் ரயில்கள் உள்பட 14 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

சென்டரலிலிருந்து செப்.12- ஆம் தேதி பெங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 12658) வழக்கமாக இரவு 10.50 பதிலாக ஒரு மணி நேரம் 30 நிமிஷங்கள் தாமதமாத நள்ளிரவு 12.20 மணிக்கு புறப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *