தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ள ஆய்வக உதவியாளர் போட்டித் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடுகள் நடந்து வரும் நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அவர்கள் இந்த தேர்வுக்கான ஆய்வை நேற்று நடத்தினார்.

பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வருகிற மே 31ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 19 ஆயிரத்து 977 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஒன்று நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தேர்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், தேர்வு மையம் அருகே பேருந்து நிறுத்தம், மின்சாரம் வசதிகள், குடிநீர், கழிப்பிட வசதிகள், கல்வி அலுவலர் தலைமையில் பறக்கும் படை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தேர்வுப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த தேர்வு சிறப்பாக நடைபெற அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

English Summary: Lab Assistant Exam is going to held this Sunday. Chennai District Collector inspects the Exam Centers in Chennai.