school-111215கடந்த ஒருவாரமாக சென்னையில் வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 13ஆம் தேதி வரை விடுமுறை என சென்னை கலெக்டர் அறித்துள்ளார். இதனால் டிசம்பர் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அந்த தேதியிலும் பள்ளிகள் திறப்பது குறித்து குழப்பம் நீடிக்கின்றது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வட்டாரம் கூறியுள்ளதாவது, ” சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் பள்ளிகளில் தங்கியிருப்பதால் அவர்கள் அனைவரும் மறு குடியமர்த்தப்படும் வரை பள்ளிகள் திறப்பதில் சாத்தியமில்லை. அதன் பின்னர், பள்ளிகள் சுத்தப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களின் பாதுகாப்பும், சுகாதாரமும் உறுதிபடுத்தப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்துமாறு சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டு நாட்களில் அப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் மழை வெள்ளத்தில் பள்ளிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்காக டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளிக்கூடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அந்த முகாம்களில் சான்றிதழ்களை தொலைத்தவர்கள் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பயணடையலாம்.

சுத்தப்படுத்தும் பணி துவங்காததாலும், பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாலும் 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
English summary-When chennai schools will be reopen-education dept